11-mdl.jpg)
வெஸ்ட் இண்டீஸின் ஃபேண்டஸி லீக் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியும், ஜமைக்கா தலாவாஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஜமைக்கா அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணிக்கு ஆண்ட்ரே ஃபிளெட்சர் - எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லூயிஸ் 9 ரன்களிலும், ஃபிளெட்சர் 23 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கார்பின் போஷ், அம்பத்தி ராயுடு ஆகியோரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் ஓரளவு தாக்குப்பிடித்த ஜூஷுவா டா சில்வா 36 ரன்களையும், ருதர்ஃபோர்ட் 16, ஜார்ஜ் லிண்டே 14, டோமினிக் டார்க்ஸ் 29 ரன்களையும் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பேட்ரியாட்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. ஜமைக்கா தரப்பில் சல்மான் இர்ஷத் 4 விக்கெட்டுகளையும், முகமது அமிர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.