1-mdl.jpg)
வெஸ்ட் இண்டீஸின் டி20 லீக் கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை எதிர்த்து கயானா அமேசான் வாரியர்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வாரியர்ஸ் அணியின் தொடக்க வீரர் சந்த்ரபால் ஹேம்ராஜ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த சைம் அயூப் - ஷாய் ஹோப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் 31 ரன்களில் சைம் அயூப் ஆட்டமிழக்க, மறுப்பக்கம் இருந்த ஷாய் ஹோப் அரைசதமடித்த கையோடு 54 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய அசாம் கான் 9, ஷிம்ரான் ஹெட்மையர் 26, கீமோ பால் 25, பிரிட்டோரியர்ஸ் 10, ரொமாரியோ செஃபெர்ட் 25 ரன்கள் என சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களைச் சேர்த்தது. பேட்ரியாட்ஸ் தரப்பில் ஒஷேன் தாமஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.