2-mdl.jpg)
கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட்ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியின் தொடக்க வீரர் எவின் லூயிஸ் 10 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய ஜோஷுவா டா சில்வா 18 ரன்களுக்கும், கூலி 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ஃபிளெட்சர் 32 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் இணைந்த ரூதர்ஃபோர்ட் - கார்பின் போஷ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூதர்ஃபோர்ட் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பேட்ரியாட்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைக் குவித்தது.