சிபிஎல் 2023: லூசியா கிங்ஸை 149 ரன்களில் சுருட்டியது பேட்ரியாட்ஸ்!
செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு காலின் முன்ரோ - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் காலின் முன்ரோ 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து வந்த சீன் வில்லியம்ஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Trending
இதையடுத்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜான்சன் சார்லஸ் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சத்ராக் டெஸ்கார்ட் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 43 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ரஸாவும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் அஷ்மெத் நெத், பென்னி ஹௌல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now