Advertisement

சிபிஎல் 2023: தனி ஒருவனாக அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஃபிளட்சர்!

செயிண்ட் லூசியா கிங்ஸிற்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 09, 2023 • 23:41 PM
சிபிஎல் 2023: தனி ஒருவனாக அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஃபிளட்சர்!
சிபிஎல் 2023: தனி ஒருவனாக அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஃபிளட்சர்! (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு காலின் முன்ரோ - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் காலின் முன்ரோ 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து வந்த சீன் வில்லியம்ஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதையடுத்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜான்சன் சார்லஸ் 42  ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

Trending


அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சத்ராக் டெஸ்கார்ட் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 43 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ரஸாவும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் அஷ்மெத் நெத், பென்னி ஹௌல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் கேப்டன் எவின் லூயிஸ் ஒரு ரன்னிலும், வில் ஸ்மீத் 2 ரன்களிலும், கூலி 5 ரன்களுக்கும், ரூதர்ஃபோர்ட் 17 ரன்களுக்கும், ஜார்ஜ் லிண்டே 9 ரன்களுக்கும், கார்பின் போஷ்க் 12 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான ஆண்ட்ரே ஃபிளட்சர் நங்கூரம் போல் நின்றதுடன் அதிரடியாக விளையாடி அரைசதமும் கடந்தார். இப்போட்டியின் இறுதிவரை களத்தில் இருந்த் ஃபிளட்சர் 6 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி 93 ரன்களைச் சேர்த்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஆண்ட்ரே ஃபிளட்சர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement