இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்துக்கு குவியும் பாராட்டுகள்!
டி20 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
அபுதாபியில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு தகுதிப்போற்றுள்ள நியூசிலாந்து அணிக்கு, சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், சோயிப் அக்தர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Trending
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டர் பக்கத்தில், “என்ன ஒரு பிரில்லியண்ட் கிரிக்கெட். போட்டியை வென்றதோடு இதயங்களையும் வென்றது நியூசிலாந்து. மிட்செலின் கிரேட் இன்னிங்ஸ், அவருக்கு உறுதுணையாக கான்வே, நீஷம் இருந்தனர். கடைசியில் பவுண்டரி எல்லையில் பேர்ஸ்டோவுக்கு நிகழ்ந்தது 2019 இறுதிப் போட்டியில் போல்ட்டுக்கு நிகழ்ந்ததை நினைவு படுத்தியது” என்று தெரிவித்தார்.
விரேந்திர சேவாக் தன் கூ செயலி பக்கத்தில், “இந்த உலகக்கோப்பையில் பிரமாதமான ஆட்டம் என்றால் இதுதான். வாவ் டேரில் மிட்செல். ஜிம்மி நீஷம் கேம் சேஞ்சர். நியூசிலாந்து பரபரப்பான ஆட்டம். இறுதிக்குள் நுழைந்ததற்கு வாழ்த்துக்கள்” என்றார்.
ஷோயப் அக்தர் இங்கிலாந்தை கிண்டல் செய்யும் மீம்ஸி வெளியிட்டுள்ளார். விவிஎஸ், லஷ்மண், “2017-ல் கிரிக்கெட்டை விட்டே போய் விடலாம் என்று நினைத்தார் நீஷம். ஆனால் இன்று போட்டியைத் திருப்பும் இன்னிங்ஸை ஆடிவிட்டார். எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது, கிரிக்கெட் ஒரு பெரிய டீச்சர்” என்று கூறியுள்ளார்.
Also Read: T20 World Cup 2021
இந்த வெற்றியின் மூலம் 2019 ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி, இப்போது 2021 டி 20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி என நியூசிலாந்து அணி சாதனை புரிந்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now