Advertisement
Advertisement
Advertisement

எஸ்ஏ20 2025: வில் ஸ்மீத்தை ஒப்பந்தம் செய்தது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!

எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியானது இங்கிலாந்தின் வில் ஸ்மீத்தை ஒப்பந்தம் செய்துள்ளது.

Advertisement
எஸ்ஏ20 2025: வில் ஸ்மீத்தை ஒப்பந்தம் செய்தது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
எஸ்ஏ20 2025: வில் ஸ்மீத்தை ஒப்பந்தம் செய்தது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 31, 2024 • 09:51 PM

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ், வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தானின் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தின் பங்களதேஷ் பிரீமியர் லீக், இலங்கையின் லங்கா பிரீமியர் லீக் என ஒவ்வொரு நாடும் தங்களுக்கென தனி டி20 தொடர்களை நடத்தி வருகின்றனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 31, 2024 • 09:51 PM

அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 லீக் தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. 

Trending

இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல் அணியின் உரிமையாளர்களுடைய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியும் எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் தொடருக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி எதிர்வரும் எஸ்ஏ 20லீக் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்காக இங்கிலாந்தின் அதிரடி வீரர் வில் ஸ்மீத்தை ஒப்பந்தம் செய்துள்ளது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதுவரை ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் 77 போட்டிகளில் விளையாடியுள்ள வில் ஸ்மீத் 15 அரைசதங்களுடன் 2056 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார். மேலும் அவரது ஸ்டிரைக் ரேட்டானது 151.2 ஆக உள்ளது. இதுதவிர்த்து கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், பங்களேதேஷ் பிரீமியர் லீக், ஐஎல் டி20 தொடர் என உலகின் பல்வேறு டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள அவர், தற்போது எஸ்ஏ 20 லீக் தொடரிலும் கால்தடம் பதிக்கவுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement