
Cricket South Africa announces updated schedule of India men's tour (Image Source: Google)
இந்திய அணி தென்ஆப்பிரிக்காவிற்கு சென்று 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாட முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் தாமதமாகியுள்ளது.
வரும் 17ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதாக இருந்தது. 2ஆவது டெஸ்ட் வரும் 26 மற்றும் 3ஆவது டெஸ்ட் ஜனவரி 3 ஆகிய தேதிகளில் தொடங்குவதாக இருந்தது.
ஆனால் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்வது தாமதமானதால், டி20 தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் மட்டுமே விளையாடுகிறது.