
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்ற போதும், இஷான் கிஷான் மீது பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
இந்த 3 போட்டிகளிலுமே கே.எல்.ராகுல் இல்லாததால், இளம் வீரர் இஷான் கிஷான் தான் தொடக்க வீரராக களமிறங்கினார். 3 போட்டிகளிலும் அவர் 35, 2, 34 என ரன்களை குவித்தார். இதில் 2 போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் கீழே தான் இருந்தது. எனினும் அவரின் ரன்விகிதம் சிறப்பாக இருப்பதால் இலங்கை தொடருக்கும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை தொடருக்கான அணியில் ரிஷப் பந்திற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவரின் இடத்திற்கு இஷான் கிஷான் வர முயற்சிக்கிறார். இருவருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அவரை போன்றே அதிரடி காட்டி ரன்களை குவிக்க திட்டமிட்டு வருவதாக அவ்வபோது தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அதற்கெல்லாம் இஷான் கிஷான் முடிவு கட்டியுள்ளார்.