
CSA T20 Challenge 2022: Rocks are the new Champion (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சிஎஸ்ஏ சேலஞ்ச் டி20 தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இடில் டைட்டன்ஸ் - ராக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற ராக்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய ராக்ஸ் அணி ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் மறுமுனையில் பீட்டர் மாலன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 71 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராக்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களைச் சேர்தது.