Advertisement

ஐபிஎல் 2022: தோனியில் ஆட்டம் சிஎஸ்கேவை பாதிக்கிறது - சுனில் கவாஸ்கர்!

தோனியின் ஆட்டம் சென்னை அணியை பெரிதும் பாதித்துள்ளது என்றும் தோனியின் வழக்கமான ஆட்டத்தை போல் அமையவில்லை என்றும் விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 04, 2022 • 16:46 PM
CSK got stuck when MS Dhoni didn't get a move along with Shivam Dube in 181 chase vs PBKS: Sunil Gav
CSK got stuck when MS Dhoni didn't get a move along with Shivam Dube in 181 chase vs PBKS: Sunil Gav (Image Source: Google)
Advertisement

நடப்பு ஐபிஎல் சீசனின் நேற்று நடைபெற்ற 11aaவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனின் முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியுள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ''எம்எஸ் தோனி எப்போதும் பவுண்டரிகள் விளாசவில்லை என்றாலும் ஒன்று, இரண்டாக ரன்கள் எடுத்து கொண்டு இருப்பார். இதனால் அணியின் ஸ்கோர் உயரும். ஆனால் இந்தப் போட்டியில் தோனியால் அதைக் கூட செய்ய முடியவில்லை. 

Trending


அவரின் இந்த ஆட்டம் சிஎஸ்கே அணியை பெரிதும் பாதித்துள்ளது. இதுவும் சிஎஸ்கேவின் தோல்விக்கு ஒரு காரணம். தோனி விளையாடிய டாட் பந்துகளுக்கு பின்னர் ஒரு சில பவுண்டரிகள் அடித்தார். எனினும் அவை எதுவும் தோனியின் வழக்கமான ஆட்டத்தை போல் அமையவில்லை.

மறுமுனையில் சிவம் துபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவருக்கு துணையாக யாரும் இல்லை. புதிய கேப்டனான ஜடேஜா மிகப்பெரிய அழுத்தத்தில் இருப்பார், அவருக்கு பக்கபலமாக தோனி உள்ளார். 

ஆனாலும் தொடர் தோல்விகளை சிஎஸ்கே சந்தித்து வருகிறது. வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும். அவர்களால் முடியும், இன்னும் 11 போட்டிகள்  உள்ளன'' என்று தெரிவித்த்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement