
வரும் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் நவம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் பிசிசிஐ, அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என பிசிசிஐ கூறியது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பட்டியலை தான் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கு காரணம் ரவீந்திர ஜடேஜா தான். கேப்டன்சி சர்ச்சையில் சிக்கிய ஜடேஜா, அடுத்தாண்டு முதல் சிஎஸ்கே அணியுடன் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் சென்னை அணியின் பட்டியல் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தக்கவைப்பு பட்டியலில் ஜடேஜாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. கேப்டன் தோனி அழுத்தம் திருத்தமாக ஜடேஜா தான் வேண்டும் என கூறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்றாக 4 ஸ்டார் வீரர்கள் கழட்டிவிடப்பட்டுள்ளனர். 9 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.