
CSK may select Ishant Sharma to replace Deepak Chahar (Image Source: Google)
ஐபிஎல் மெகா ஏலத்தில் 14 கோடி ரூபாய் கொடுத்து தீபக் சாஹரை சிஎஸ்கே அணி வாங்கியது. ஆனால் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இன்னும் இணையாமல் உள்ளார்.
தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல வெளியாகியுள்ளது. அதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் தீபக் சஹார் விளையாட வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது.
அதே ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்றும் எந்த அணியும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவை எடுக்கவில்லை. சமீபத்தில் ஐபிஎல் தொடரில் கெஸ்ட் பாக்ஸ் எனப்படும் திரையில் மக்களோடு மக்களாக வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.