
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனின் எஞ்சியுள்ள போட்டிகள், வரும் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக சிஎஸ்கே அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அணியின் முக்கிய வீரர்கள் இருவர் முதல் சில போட்டிகளில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டூ பிளெசிஸ் தற்போது கரீபியன் லீக்கில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டூப்பிளசிஸுக்கு சமீபத்தில் தலையில் பந்துபட்டு ஏற்பட்ட காயத்தால் கன்கஸனில் வெளியேறினார். இதனால் கடந்த இரு போட்டிகளாக அவர் பங்கேற்கவில்லை. கரிபீயன் லீக்கில் அருமையான ஃபார்மில் இருந்து வரும் டூபிளெசிஸ் 3ஆவது அதிகபட்ச ஸ்கோரை எடுத்த வீரராக இருந்து வருகிறார்.