
CSK sign Behrendorff as Hazlewood's replacement (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இன்று முதல் ஆரம்பமாகுகிறது. இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து அவரது இடத்திற்கு கப்தில், கான்வே, அலக்ஸ் ஹேல்ஸ் ஆகிய பேட்ஸ்மேன்களில் யாரேனும் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவுள்ளது என்ற தகவல் வெளியாகிய நிலையில், தற்போது முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சளர் ஒருவரை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது.