
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணியை வீழ்த்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை சாதனையை சமன் செய்தது. தோனி தலைமையிலான சிஎஸ்கே பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டினை பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் 2023ஆம் ஆண்டு தொடரில் சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரராக விளங்கிய ஷிவம் துபே பல போட்டிகளில் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். குறிப்பாக பிரமாண்டமான சிக்ஸர்களை விளாசி அசத்திய அவர் சிக்ஸர் துபே என்ற பட்டத்தினையும் ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தார்.
அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த தொடரில் 14 போட்டியில் விளையாடிய அவர் 158 ரன்கள் என்கிற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 418 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது பேட்டிங் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்த வேளையில் அவர் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரின் போது இந்திய அணியிலும் கம்பேக் கொடுத்திருந்தார். இந்நிலையில் ஆல்ரவுண்டரான அவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் பந்து வீசாததற்கு என்ன காரணம்? என்பது குறித்து தற்போது விளக்கம் ஒன்றினை கொடுத்துள்ளார்.