Advertisement

ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 07, 2024 • 16:51 PM
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் ட
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் ட (Image Source: Cricketnmore)
Advertisement

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, நடப்பு சீசனில் தோல்வியையே கண்டிராத ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைச் சந்தித்து ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. அதிலும் சென்னை நடைபெற்ற போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட அணியின் பேட்டர்கள், வெளி மைதானங்களில் சோபிக்க தவறியது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திர போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக சொதப்பி வருகின்றனர். 

மேலும் கடந்த போட்டியில் அஜிங்கியா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடஜே போன்ற வீரர்கள் ரன்களைச் சேர்த்தாலும், அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறியது குறிப்பிடத்தக்கது. இதனால் நாளைய ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் பந்துவீச்சு துறையில் முஸ்தஃபிசூர் ரஹ்மான், மதீஷா பதிரனா ஆகியோர் முக்கிய வீரர்களாக இருந்துள்ளார். ஆனால் கடந்த போட்டியில் இருவரும் விளையாடதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் நாளைய போட்டியிலும் அவர்கள் விளையாடுவார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

மறுபக்கம் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி நடைபோட்டு வருகிறது. அணியின் பேட்டிங்கில் பில் சால்ட், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவர்களுடன் ஸ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங் ஆகியோரும் ஃபர்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இருப்பினும் அறிமுக போட்டியில் அசத்திய அங்கிரிஷ் ரகுவன்ஷி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் மிட்ச்செல் ஸ்டார்க், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தங்களது வேகத்தால் எதிரணிக்கு சவாலை கொடுத்து வருகின்றனர். அவர்களுடன் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி வருவது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படு வருகிறது. இருப்பினும் கடந்த போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய ஹர்ஷித் ராணா இப்போட்டியில் பங்கேற்பார் என்பதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு துறை வலிமை வந்ததாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

பிட்ச் ரிப்போர்ட்

பொதுவாக, சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்த மைதானத்தின் ஆடுகளம் மெதுவாகவே உள்ளது. இதன் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கு அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். போட்டி தொடர்ந்து நடக்கும் போது ஏற்கனவே வறண்டு இருக்கும் பிட்ச் கூடுதலாக மெதுவாகிறது. இதனால் இங்கு பேட்டர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். அதேசமயம் கடந்த சில ஐபிஎல் சீசன்களில் இங்கு சில நல்ல ஸ்கோர்களும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 170 ரன்களாக இருக்கிறது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 29
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 18
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 10
  • முடிவில்லை - 01

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்கியா ரஹானே, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டேரில் மிட்செல், எம்எஸ் தோனி, மொயீன் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பில் சால்ட், சுனில் நரைன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - பில் சால்ட்
  • பேட்ஸ்மேன்கள் - அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி
  • ஆல்ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா, சுனில் நரைன் (கேப்டன்), ஆண்ட்ரே ரசல் (துணை கேப்டன்), மொயின் அலி
  • பந்துவீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி.

CSK vs KKR IPL 2024 Dream11 Prediction, Today Match CSK vs KKR, CSK vs KKR Dream11 Team, Fantasy Cricket Tips, CSK vs KKR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Chennai Super Kings vs Kolkata Knight Riders

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement