Advertisement

ஐபிஎல் 2022: ருதுராஜ் கெய்க்வாட் மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது - ரவீந்திர ஜடேஜா

ருதுராஜ் எங்கள் அணியின் முக்கியமான வீரர். அவருக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

Advertisement
CSK will continue to back Ruturaj Gaikwad: Ravindra Jadeja after opener's dismal show in IPL 2022
CSK will continue to back Ruturaj Gaikwad: Ravindra Jadeja after opener's dismal show in IPL 2022 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 04, 2022 • 09:46 AM

ஐபிஎல் 15ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 04, 2022 • 09:46 AM

முதல் 2 தோல்விக்கும் டாஸ் இழந்தது தான் காரணம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய போட்டியில் டாஸை வென்று முதலில் பந்துவீசியும் சிஎஸ்கே தோற்றது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Trending

தற்போது புள்ளி பட்டியலில் 9ஆவது இடத்தில் சிஎஸ்கே அணியின் பிளே ஆப் வாய்ப்பு மெய்ப்பட வேண்டும் என்றால் வெற்றி பாதைக்கு திரும்பியே ஆக வேண்டும்.

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் 0,1,1 என மூன்று இன்னிங்சிலும் சொதப்பினார். இதனால் அவரது இடத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய ஜடேஜா,  “ருதுராஜ் எங்கள் அணியின் முக்கியமான வீரர். அவருக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். அவர் அடுத்த போட்டியிலும் விளையாடுவார். ருத்துராஜ் மீண்டும் ஃபார்ம்க்கு திரும்புவார் என நம்பிக்கை உள்ளது. ருத்துராஜ் கடந்த காலங்களில் எங்கள் அணிக்காக பல வெற்றிகளை தேடி தந்துள்ளார். இதனால் நாங்கள்அவருக்கு ஊக்கம் கொடுப்போம். இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வி இழந்ததற்கு காரணம் பேட்டிங் தான்.

நாங்கள் கொத்து கொத்தாக விக்கெட்டை இழந்தோம். பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. அடுத்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன். சிவம் துபே இந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடினார். அவருக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து, நெருக்கடி ஏற்படாமல் பார்த்து கொள்வோம்” என்று தெரிவித்தார். 

இனி சிஎஸ்கேவுக்கு 5 நாள் ஓய்வு கிடைக்க உள்ளது. சிஎஸ்கேவின் அடுத்த போட்டி வரும் 9ஆம் தேதி சனிக்கிழமை ஹைதராபாத் அணியுடன் மோத உள்ளது. இந்த இடைவெளியில் சிஎஸ்கே தங்களது யுத்தியை மாற்றி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement