
Curtis Campher receives maiden T20I call-up as Ireland name squad for Zimbabwe series (Image Source: Google)
அயர்லாந்து அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடர் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதவுள்ள கடைசி தொடர் இது என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான அயர்லாந்தின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி கர்டிஸ் கேம்பர் அயர்லாந்து டி20 அணியில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.