Advertisement

CWC 2023 Qualifiers: விண்டீஸின் உலகக்கோப்பை கனவை கலைத்தது ஸ்காட்லாந்து!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று சூப்பர் 6 ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 01, 2023 • 20:15 PM
CWC 2023 Qualifiers: Heartbreak for West Indies in Harare as Scotland beat them for the first time i
CWC 2023 Qualifiers: Heartbreak for West Indies in Harare as Scotland beat them for the first time i (Image Source: Google)
Advertisement

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்றுப்போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் சுற்றின் 3ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பியது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜான்சன் சார்லஸ், ஷமாரா ப்ரூக்ஸ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், பிராண்டன் கிங் 22 ரன்களிலும், கைல் மேயர்ஸ் 5 ரன்களிலும்,  கேப்டன் ஷாய் ஹோப் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Trending


அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டர் - ரொமாரியோ செஃபெர்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரொமாரியோ செஃபெர்ட் 36 ரன்களுக்கும், ஜேசன் ஹோல்டர் 45 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்காட்லாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய பிராண்டன் மெக்முல்லன் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் சோல், மார்க் வாட், கிறிஸ் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.  

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர் கிறிஸ்டோபர் மெக்பிரைட் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மேத்யூ கிராஸ் - பிராண்டன் மெக்முல்லன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்த நிலையில், 69 ரன்களை எடுத்திருந்த மெக்முல்லன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜார்ஜ் முன்ஸியும் 18 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.  இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேத்யூ கிராஸ் 74 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதன்மூலம் ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. இத்தோல்வியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பையும் ஏறத்தாழ இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement