காமன்வெல்த் 2022: இங்கிலாந்தை 110 ரன்னில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான காமன்வெல்த் மூன்றாவது பிளே ஆஃப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 111 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் முதன்முதலாக டி20 முறையில் மகளிா் கிரிக்கெட் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தியா உள்பட 8 அணிகள் இதில் ஆடுகின்றன. 5 முறை உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பாா்படோஸ் அணிகளுடன் ஏ பிரிவில் இந்தியா விளையாடியது.
இத்தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறினர். அதன்படி நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போடியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Trending
இதனால் இன்று நடைபெற்று வரும் வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் நியூசிலாந்து மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து வீராங்கனைகள் நியூசிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நடாலி ஸ்கைவர் 27 ரன்களையும், எமி ஜோன்ஸ் 26 ரன்களையும் எடுத்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் ஹெலி ஜெசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now