
Dale Steyn predicts the winner of IPL 2021 final (Image Source: Google)
ஐபிஎல் 14ஆவது சீசன் நாளையுடன் முடிகிறது. நாளை துபாயில் நடக்கும் இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன. இரு அணிகளுமே கோப்பையை வென்ற அணிகள் தான். 3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியும், 2 முறை கோப்பையை வென்ற கேகேஆர் அணியும் இந்த இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
2014ஆம் ஆண்டுக்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள கேகேஆர் அணி, ஐபிஎல் இறுதிப்போட்டியில் வைத்திருக்கும் 100 சதவிகித வெற்றி விகித சாதனையை தக்கவைத்துக்கொள்ளும் வகையில், இந்த முறையும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
அதேசமயம் கடந்த சீசனில் முதல்முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, அதற்கு பதிலடியாக இந்த சீசனில் 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.