இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 14ஆவது லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா மற்றும் கலே டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தம்புலா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கலே டைட்டன்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் டிம் செய்ஃபெர்ட் 15 ரன்களுக்கும், ஷெவோன் டேனியல் 7 ரன்களுக்கும், சாத் பௌஸ் 22 ரன்களுக்கும், ஷாகிப் அல் ஹசன் 13 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய சொஹன் டி லிவெரா 12 ரன்களுக்கு அடடமிழந்தார். இதையடுத்து வந்த கேப்டன் தசுன் ஷனாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 பவுண்டரிகளுடன் 36 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் கள்ளமிறக்கிய லஹிரு சமரகூன், ரஜிதா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.