
Danni Wyatt returns as England name squad for New Zealand ODIs (Image Source: Google)
நியூசிலாந்து மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 16ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. ஹீத்தர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணியில் டாமி பியூமண்ட், நடாலி ஸ்கைவர், சோஃபி எக்லெஸ்டோன்,லாரன் வின்ஃபீல்ட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் இந்திய தொடரிலிருந்து விலகியிருந்த டேனியல் வையட் மீண்டும் இங்கிலாந்து ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.