
D'Arcy Short takes unbeaten Trent Rockets to the top (Image Source: Google)
தி ஹண்ரட் ஆடவர் தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் லண்டன் ஸ்பிரிட் - ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லண்டன் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராக்கெட்ஸ் அணிக்கு டி ஆர்சி ஷார்ட் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சிறப்பாக விளையாடியா டி ஆர்சி ஷார்ட் அரைசதம் அடித்ததோடு, 70 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமெ இழந்து 124 ரன்களை சேர்த்தது. லண்டன் அணி தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.