
கடந்த பல ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் தடுமாற்றத்தை சந்தித்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது கடந்த பல சீசன்களை காட்டிலும் இம்முறை சஞ்சு சாம்சன் தலைமையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட அணியுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்த ராஜஸ்தான் அணி தங்களது முதலாவது குவாலிபயர் போட்டியின்போது குஜராத் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக தற்போது இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது.
அதன்படி இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த இரண்டாவது குவாலிபயர் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு செல்லும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.