
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 141 ரன்கள் எடுத்தது. 9 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி விளையாடிவருகிறது.
இந்நிலையில்இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார் டேவான் கான்வே. இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருக்கு ஆறுதல் சொல்லும் வகையில் சமூக வலைதளமான இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பகிர்ந்துள்ளார்.