Advertisement
Advertisement
Advertisement

AFG vs NZ, Only Test: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!

ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமும் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது.

Advertisement
AFG vs NZ, Only Test: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!
AFG vs NZ, Only Test: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 11, 2024 • 12:14 PM

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நேற்று நெய்டாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் தொடங்கியது. உலக கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் இருந்தன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 11, 2024 • 12:14 PM

அதன்படி செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்க இருந்த இந்த போட்டியானது ஈரப்பதம் மற்றும் மோசமான வானிலை காரணமாக டாஸ் நிகழ்வானது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர் மைதானத்தில் ஈரப்பதமானது தொடர்ந்து இருந்து வந்த காரணத்தால் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று தொடங்க இருந்த இரண்டாம் நாள் ஆட்டமும் ஈரப்பதம் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. 

Trending

இந்நிலையில் இன்றைய தினமாவது இந்த டெஸ்ட் போட்டி நடைபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நொய்டாவில் கனமழை பெய்து வருவதன் காரணமாக இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமும் முழுவதுமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே முதல் இரண்டு நாள் ஆட்டமும் விளையாட முடியாத சூழ்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டமும் முழுமையாக கைவிடப்பட்டுள்ளது இரு அணியினரையும் அதிருப்தியடைச் செய்துள்ளது.  

ஆஃப்கானிஸ்தான் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, அப்துல் மாலிக், ரியாஸ் ஹசன், அப்சர் ஸசாய், இக்ராம் அலிகில், பஹீர் ஷா மஹ்பூப், ஷாஹிதுல்லா கமால், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஷம்ஸ் உர் ரஹ்மான், ஜியா உர் ரஹ்மான் அக்பர், ஜாஹிர் கான் பக்தீன், கைஸ் அஹ்மத், கலீல் அஹ்மத், நிஜாத் மசூத்.

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து அணி: டிம் சௌதீ (கே), டாம் பிளென்டல், மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டாம் லேதம், டேரில் மிட்செல், வில்லியம் ஓ ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement