கரோனா தொற்றிலிருந்து மீண்டார் அமித் மிஸ்ரா!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மூத்த வீரரான அமித் மிஸ்ரா கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார்.
பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மூத்த வீரர் அமித் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
Trending
இந்நிலையில் அவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில், தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்து, இன்று வீடு திரும்புகிறார்.
இதுகுறித்து அமித் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்களப் பணியாளர்கள் நம் நாட்டின் உண்மையான ஹீரோக்கள். நான் தொற்றிலிருந்து மீள உதவிய அனைவருக்கும் என மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் உங்கள் குடும்பத்தினர் செய்த தியாகங்களுக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இந்திய அணி வீரர் விருத்திமான் சஹா, சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, கேகேஆர் அணி வீரர் டிம் செய்ஃபெர்ட் ஆகியோர் கரோனா தொற்றில் இருந்து மீண்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now