
DC Skipper Rishabh Pant Lays It On David Warner's Brilliant Knock Against SRH (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 21 ரன் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன் குவித்தது.
தொடக்க வீரர் டேவிட் வார்னர் 58 பந்தில் 92 ரன்னும், ரோமன் பாவெல் 35 பந்தில் 67 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய ஹைதராபாத் அணிகள் சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தது.
அந்த அணியால் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 62 ரன்னும், மார்கிராம் 42 ரன்னும் எடுத்தனர்.