ஐபிஎல் 2021 தகுதிச்சுற்று 2: டெல்லி vs கொல்கத்தா -உத்தேச அணி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு 14ஆவது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்று சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
Trending
இந்நிலையில் இன்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் 2ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சென்னை அணியை எதிர்த்து விளையாடும் என்பதன் காரணமாக இன்றைய போட்டியில் இரண்டு அணிகளுமே வெற்றியை எதிர்நோக்கி விளையாட காத்திருக்கின்றன.
கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட டெல்லி அணியானது இம்முறை நிச்சயம் கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய இரண்டு அணிகளையும் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இளம் வீரர்கள் கொண்ட டெல்லி அணியானது இன்று கொல்கத்தா அணியை வீழ்த்துமா ? என்பது போட்டியின் முடிவிலேயே தெரியவரும்.
அதேசமயம் இருமுறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள கேகேஆர் அணியும் நடப்பு சீசனில் அபாரமான ஃபார்மில் உள்ளதன் காராணமாக, இப்போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச லெவன்
டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஷிகர் தவான், பிருத்வி ஷா, ரிஷப் பந்த் (கே), ஸ்ரேயாஸ் ஐயர், சிம்ரான் ஹெட்மையர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, டாம் கர்ரன் / மார்கஸ் ஸ்டோனிஸ், அவேஷ் கான், அன்ரிச் நோர்ட்ஜே
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஈயான் மோர்கன் (கே), தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன், லோக்கி ஃபர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.
Win Big, Make Your Cricket Tales Now