Advertisement

ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 40ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan April 23, 2024 • 15:37 PM
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Advertisement

ஐபிஎல் 17ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 40ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவுள்ளது. முன்னதாக இத்தொடரில் இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்நிலையில் அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி இப்போட்டியில் விளையாடும் என்பதால் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

டெல்லி கேப்பிட்டல் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த சீசனில் இங்கு நடைபெற்ற முதல் போட்டியிலேயே இமலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேலும் இங்குள்ள பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்கள் தங்கள் ஷாட்டுகளை தேர்வு செய்து விளையாட ஏதுவாக இருக்கும். மேலும் இங்கு இரவு நேரத்தில் பனியின் தாக்கம் இருந்தாலும் அது பெரிதளவில் பந்துவீச்சாளர்களுக்கு கை கொடுக்காது என்பதால், டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 02
  • குஜராத் டைட்டன்ஸ் - 02

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிருத்வி ஷா, டேவிட் வார்னர், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், ரிஷப் பந்த் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்.

குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில் (கே), விருத்திமான் சாஹா, டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, சந்தீப் வாரியர், மோஹித் சர்மா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ்: டேவிட் வார்னர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஷுப்மன் கில் (துணை கேப்டன்), ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க் (கேப்டன்), சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர்
  • ஆல்ரவுண்டர்கள்: அக்சர் படேல், அஸ்மத்துல்லா ஒமர்சாய்
  • பந்துவீச்சாளர்கள்: ரஷித் கான், குல்தீப் யாதவ்

DC vs GT IPL 2024 Dream11 Prediction, Today Match Prediction, Today Match DC vs GT, DC vs GT Dream11 Team, Fantasy Cricket Tips, DC vs GT Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Delhi Capitals vs Gujarat Titans

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement