Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 35ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan April 19, 2024 • 14:46 PM
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Advertisement

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 35ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத நி விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, இரண்டு தோல்வி என புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என பட்டியலின் 6ஆம் இடத்திலும் உள்ளனர். மெலும் இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

டெல்லி கேப்பிட்டல் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்பு ஐபிஎல் சீசனில் இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுவாகும். இந்த மைதானத்தில் சர்வதேச டி20யில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 140 ரன்களாக இருந்தது, ஆனால் கடந்த காலங்களில் அதிக ஸ்கோரைப் பெற்ற போட்டிகளும் இங்கு நடைபெற்றுள்ளன. அதன்படி இங்கு நடைபெற்ற சர்வதேச டி2 போட்டியில் 212 ரன்கள் குவிக்கப்பட்டதே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது அணிக்கு உதவலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 23
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 11
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 12

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிருத்வி ஷா, ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், ஷாய் ஹோப், ரிஷப் பந்த் (கேப்டன்), அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், கலீல் அகமது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், ஐடன் மார்க்ரம், அப்துல் சமத், நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஹென்ரிச் கிளாசென், ரிஷப் பந்த்
  • பேட்ஸ்மேன்கள் - டிராவிஸ் ஹெட் (கேப்டன்), பிருத்வி ஷா, அபிஷேக் சர்மா, ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க்(துணைக்கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்ரவுண்டர் - அக்ஸர் படேல், ஐடன் மார்க்ரம்
  • பந்துவீச்சாளர்கள் - பாட் கம்மின்ஸ், கலீல் அகமது.

DC vs SRH IPL 2024 Dream11 Prediction, Today Match DC vs SRH, DC vs SRH Dream11 Team, Fantasy Cricket Tips, DC vs SRH Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Delhi Capitals vs Sunrisers Hyderabad

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement