
இந்திய அணி ஜிமபாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விலையாடி வருகிறது. இதில் முதல் போட்டி ஜிம்பாப்வேவின் ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 40.3 ஓவரில் வெறும் 189 ரன்கள் மட்டுமே எடுத்த ஜிம்பாப்வே அணி ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர், அக்ஷர் பட்டேல் மற்றும் பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில்லும், ஷிகர் தவானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த கூட்டணி 30.5 ஓவரில் இலக்கையும் அடைந்து இந்திய அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்துள்ளது. ஷிகர் தவான் 81 ரன்களுடனும், சுப்மன் கில் 82 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.