இந்திய அணியின் கேப்டனாக இவரே இருக்க வேண்டும் - தீபக் சஹார்!
இலங்கை அணிக்கெதிரான தொடரில் ஷிகர் தவானே இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேண்டுமென தீபக் சஹார் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துடன் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அதே சமயத்தில் ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடும் என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது. இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணியால் நிச்சயம் இலங்கை திரும்ப முடியாது என்பதனால் மற்றொரு இளம் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது.
Trending
அந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்த இலங்கை தொடரில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் ? யார் கேப்டனாக இருப்பார்கள் ? யார் பயிற்சியாளராக இருப்பார்கள் ? என்று பலரும் தங்களது கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் இந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டிய வீரர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தீபக் சஹார், “என்னை பொறுத்தவரை ஷிகர் தவான் தான் கேப்டனுக்கு நல்ல தேர்வாக இருப்பார். ஏனெனில் இந்திய அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர் அவர். எனவே அணிக்குள் சீனியர் வீரரான அவருக்கு மற்ற வீரர்களிடமிருந்து நல்ல புரிதல் இருக்கும். இதன் காரணமாக நிச்சயம் தவான் கேப்டனாக இருந்தால் அது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now