
Deepak Chahar Likely To Be Ruled Out Of IPL 2022: Report (Image Source: Google)
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்து வருபவர் தீபக் சஹார். இவர் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரின் போது தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டத்து. இதன் காரணமாக அவர் போட்டியின் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார்.
மேலும் அவரது காயம் குணமடைய ஆறு வாரங்களாவது தேவைப்படும் என மருத்துவர்கள் கூறியதால் இலங்கையுடனான தொடரிலிருந்தும் தீபக் சஹார் விலகினார்.