
Deepak Chahar Likely To Miss Four More Months Of Cricket: Report (Image Source: Google)
15ஆவது ஐபிஎல் தொடர் கடந்த 3 வாரங்களாக விறுவிறுப்புக்கு சற்றும் பஞ்சம் இன்றி நடைபெற்று வருகிறது. இதில் 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த சென்னை அணி தற்போதுதான் மீண்டுள்ளது.
சென்னை அணியின் தோல்விகளுக்கு தீபக் சஹார் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. காலில் தசை நார் கிழிவு பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த தீபக் சஹார் வரும் 26ஆம் தேதி ஐபிஎல் தொடருக்கு வருவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக வலைப்பயிற்சியையும் தொடங்கியிருந்தார்.
அதன்பின்னர் திடீரென அவர் ஐபிஎல்-ல் இருந்தே விலகுவதாக அறிவிக்கப்பட்டது. முதுகு பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரால் சரியாக பவுலிங் வீச முடியாது எனத்தெரிவிக்கப்பட்டது. அது குணமடைய 2 மாதங்களாவது ஆகும் என்பதால் சிஎஸ்கேவின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் போனது.