Advertisement

ஐபிஎல் 2022: பயிற்சிக்கு திரும்பிய தீபக் சஹார் - ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் போட்டிகள் இன்று தொடக்க உள்ள நிலையில், சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை வைத்துள்ளது.

Advertisement
 Deepak Chahar Starts Practicing As Chennai Superkings Gear Up For Opener Against Kolkata Knight Rid
Deepak Chahar Starts Practicing As Chennai Superkings Gear Up For Opener Against Kolkata Knight Rid (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 26, 2022 • 06:48 PM

சிஎஸ்கே அணியில் மொயின் அலி இன்றைய ஆட்டத்தில் களமிறங்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே அணி தங்களது ஆஸ்தான பிளேயிங் லெவனில் பல மாற்றங்கள் செய்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 26, 2022 • 06:48 PM

இந்த நிலையில், சிஎஸ்கே ஆல்ரவுண்டர் தீபக் சாஹர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் சிஎஸ்கே ரசிகர்களும் சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சிஎஸ்கே அணி தீபக் சாஹர் குறித்து ஃபிட்னஸ் தகவலை வெளியிட்டுள்ளது.

Trending

இதில் தீபக் சாஹர் காயம் நன்கு குணமடைந்து , முழு உடல் தகுதியை நோக்கி பயணித்து வருகிறார்.இதனையடுத்து, சிஎஸ்கே பயிற்சி முகாமில் உள்ள தீபக் சாஹர் இன்று பந்துவீச தொடங்கிவிட்டார். பந்துவீசும் போது அவர் எந்த வலியையும் உணரவில்லை. இதனால் சிஎஸ்கே குழு மகிழ்ச்சியில் உள்ளது.

இருப்பினும் தீபக் சாஹர் இன்றைய போட்டியிலேயே விளையாடுவார் என்று நாம் நினைப்பது சந்தேகமே. தீபக் சாஹர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவார். அவருக்கு எந்த குறையும் இல்லை. போட்டியில் அவரால் பழைய படி முழுமையாக செயல்பட முடியும் என்றும் பட்சத்தில் அவர் விளையாடுவார்.

இதனால் தீபக் சாஹர் சென்னை அணியின் 3ஆவது அல்லது 4ஆவது போட்டியில் நிச்சயம் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபக் சாஹர் வருகையால் அணி மேலும் பலமாக இருக்கும். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஐபிஎல் ஏலத்தில் தீபக் சாஹருக்கு 14 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி அவரை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement