
Deepak Hooda Leaves Baroda Ahead Of Domestic Season (Image Source: Google)
இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நட்சத்திர வீரராக திகழ்பவர் தீபக் ஹூடா. இவர் பரோடா அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
கடந்தாண்டு உள்ளூர் போட்டிகளின் போது பரோடா அணியின் கேப்டன் குர்னால் பாண்டியாவுக்கும், துணைக்கேப்டன் தீபக் ஹூடாவிற்கு சில சலசலப்பு இருந்ததாக கிரிக்கெட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது.
அதன்பின் சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் போது கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாக தீபக் ஹூடாவை பரோடா கிரிக்கெட் சங்கம் இடைநீக்கம் செய்திருந்தது. ஆனாலும் அவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.