Advertisement
Advertisement
Advertisement

சேப்பாக்கில் இதுதான் தோனியின் கடைசி போட்டியா? - வைரலாகும் சுரேஷ் ரெய்னாவின் பதில்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனியின் ஓய்வு முடிவு குறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறிய கருத்தானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
சேப்பாக்கில் இதுதான் தோனியின் கடைசி போட்டியா? - வைரலாகும் சுரேஷ் ரெய்னாவின் பதில்!
சேப்பாக்கில் இதுதான் தோனியின் கடைசி போட்டியா? - வைரலாகும் சுரேஷ் ரெய்னாவின் பதில்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 13, 2024 • 03:54 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்களையும், துருவ் ஜூரெல் 28 ரன்களையும் சேர்த்தனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 13, 2024 • 03:54 PM

சிஎஸ்கே அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Trending

இருப்பினும் இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 42 ரன்களையும், அவருக்கு துணையாக சமீர் ரிஸ்வி 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சிஎஸ்கே அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில், இந்தப் போட்டியின் போது ஜியோ சினிமாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக வந்த சுரேஷ் ரெய்னாவிடம், அபினவ் முகுந்த் கேள்வி எழுப்பினார். அப்போது சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டி தான் தோனியின் கடைசி போட்டியாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா கண்டிப்பாக இல்லை என்று கூறினார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவின் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement