Advertisement

WPL 2024 Final : டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan March 16, 2024 • 20:10 PM
WPL 2024 Final : டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
WPL 2024 Final : டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்திய நிலையில், நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியானது முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து அசத்தியது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணி  - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களும் அபாரமாக செயல்படமுடியும். அதேசமயம் இங்கு எதிரணியை தடுப்பது சவாலாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 04
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 00

உத்தேச லெவன்

டெல்லி: மெக் லானிங் (கேட்ச்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆலிஸ் கேப்சி, மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசென், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, தனியா பாட்டியா (வாரம்), ஷிகா பாண்டே, மின்னு மணி

பெங்களூரு: ஸ்மிருதி மந்தனா (கே), எல்லிஸ் பெர்ரி, சோஃபி டிவைன், ரிச்சா கோஷ், சோஃபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், திஷா கசத், ஸ்ரேயங்கா பாட்டீல், ஷ்ரத்தா போகர்கர், ஆஷா சோபனா, ரேணுகா தாக்கூர் சிங்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ்: மெக் லானிங், ஸ்மிரித் மந்தனா, ஷஃபாலி வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள்: சோஃபி டெவின், எல்லிஸ் பெர்ரி (கேப்டன்), ஜார்ஜ் வேர்ஹாம், ஆலிஸ் கேப்ஸி (துணை கேப்டன்), ஜெஸ் ஜோனசென், மரிஸான் கேப், சோஃபி மோலினக்ஸ்
  • பந்து வீச்சாளர்கள்: ஆஷா சோபனா

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement