Advertisement
Advertisement
Advertisement

டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், இறுதிப்போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan March 25, 2023 • 22:44 PM
DEL-w vs MI-w WPL Final Dream11 Team: Nat Sciver or Marizanne Kapp? Check Fantasy Team, C-VC Options
DEL-w vs MI-w WPL Final Dream11 Team: Nat Sciver or Marizanne Kapp? Check Fantasy Team, C-VC Options (Image Source: Google)
Advertisement

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் ரசிகர்களில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஹர்மன்பரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸுகும், மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

மும்பையிலுள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - பிரபோர்ன் கிரிக்கெட் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்ட்லஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து அசத்தியது. இதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் அதிரடியான பேட்டிங் அமைந்துள்ளது. இதில் ஷஃபாலி வெர்மா, மெக் லெனிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அலிஸ் கேப்ஸி, மரிசேன் கேப், தனியா பாட்டியா என தொடர்ந்து அபார பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றன.

பந்துவீச்சில் பூனம் யாதவ், ஷிகா பாண்டே, மரிசேன் கேப், அருந்ததி ரெட்டி, ராதா யாதாவு ஆகியோருடன் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜெஸ் ஜொனசென் இருப்பந்தும் அணிக்கான வெற்றிவாய்ப்பை அதிகரிப்பதுடன், எதிரணியின் நெருக்கடியையும் அதிகரித்துள்ளது. 

மறுபக்கம் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசன் முழுவதும் அதிரடியாக விளையாடி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதேபோல் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், யுபி வாரியர்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்திலும் அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்து இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக நுழைந்துள்ளது. 

அந்த அணியின் பேட்டிங்கில் ஹெய்லி மேத்யூஸ், யஷ்திகா பாட்டியா, ஹர்மன்ப்ரீத் கவுர், நாட் ஸ்கைவர், அமிலியா கெர் ஆகியோரும், பந்துவீச்சில் இஸி வாங், அமன்ஜொட் கவுர், சைகா இஷாக், பூஜா வஸ்திரேகர் ஆகியோரும் இருப்பதும் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இதில் இஸி வாங் கடந்த போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் விழ்த்தி அசத்தியுள்ளது எதிரணிக்கும் சற்று பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

உத்தேச லெவன்

டெல்லி கேப்பிட்டல்ஸ் - மெக் லெனிங் (கே), ஷஃபாலி வர்மா, ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் கேப், தனியா பாட்டியா, ஜெஸ் ஜோனாசென், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ்.

மும்பை இந்தியன்ஸ் - ஹெய்லி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்பிரீத் கவுர் (கே), அமெலியா கெர், பூஜா வஸ்த்ரகர், இஸ்ஸி வாங், அமன்ஜோத் கவுர், ஹுமைரா காசி, ஜிந்திமணி கலிதா, சைகா இஷாக்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - யாஸ்திகா பாட்டியா
  • பேட்டர்ஸ் – மெக் லெனிங், ஹர்மன்பிரீத் கவுர்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஜெஸ் ஜோனாசென், ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர், மரிசான் கேப், அமெலியா கெர், ஆலிஸ் கேப்ஸி
  • பந்துவீச்சாளர்கள் - ஷிகா பாண்டே, சைகா இஷாக்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement