Advertisement
Advertisement
Advertisement

WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs யுபி வாரியர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan March 08, 2024 • 14:39 PM
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs யுபி வாரியர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs யுபி வாரியர்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் மெல் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இத்தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் யுபி வாரியர்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்தில் உள்ளது. இரு அணிகளும் அதிரடியான வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணி  - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs யுபி வாரியர்ஸ்
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களும் அபாரமாக செயல்படமுடியும். அதேசமயம் இங்கு எதிரணியை தடுப்பது சவாலாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 03
  • யுபி வாரியர்ஸ் - 00

உத்தேச லெவன்

யுபி வாரியர்ஸ்: அலிசா ஹீலி (கே), கிரண் நவ்கிரே, கிரேஸ் ஹாரிஸ், சாமரி அத்தபத்து, தீப்தி ஷர்மா, சோஃபி எக்லெஸ்டோன், பூனம் கெம்னர், ராஜேஸ்வரி கெய்க்வாட், சைமா தாகூர், அஞ்சலி சர்வானி

டெல்லி கேப்பிட்டல்ஸ்: மெக் லானிங்(கே), ஷஃபாலி வர்மா, ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஸான் கேப், ஜெஸ் ஜோனாசென், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ஷிகா பாண்டே, தனியா பாட்டியா, டைட்டாஸ் சாது

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - அலிசா ஹீலி
  • பேட்ஸ்மேன்கள் - மெக் லெனிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா
  • ஆல்-ரவுண்டர் - கிரேஸ் ஹாரிஸ், ஜெஸ் ஜோனசன் (துணை கேப்டன்), சாமரி அத்தபத்து, மரிஸான் கேப், தீப்தி சார்மா, ஆலிஸ் கேப்சி
  • பந்துவீச்சாளர்கள் - சோஃபி எக்லெஸ்டோன், ராதா யாதவ்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement