Advertisement

ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 45ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan May 01, 2022 • 11:43 AM
Delhi Capitals vs Lucknow Super Giants, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Proba
Delhi Capitals vs Lucknow Super Giants, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Proba (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 2022 இன் 45ஆவது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.டாடா ஐபிஎல் சீசனின் புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தற்போது புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றிருக்கிறது. முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்ட டெல்லி அணி அதே உத்வேகத்தை இன்றைய ஆட்டத்திலும் தொடர முனைப்பு காட்டும். 

அந்த அணியில் டேவிட் வார்னர் (6 ஆட்டத்தில் 3 அரைசதத்துடன் 261 ரன்) நல்ல பார்மில் இருப்பது அந்த அணிக்கு சாதகமான அம்சமாகும். ஆனால் ரிஷாப் பந்திடம் (8 ஆட்டத்தில் 190 ரன்) இருந்து இன்னும் கவனிக்கத்தக்க இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. அவரது பேட்டும் சுழன்றடித்தால் தான் ‘மெகா’ ஸ்கோரை அடைய முடியும்.

அதேசமயம் கேஎல் ராகுல் தலமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 6 வெற்றி, 3 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 3ஆவது இடம் வகிக்கிறது. கடைசி இரு ஆட்டங்களில் மும்பை, பஞ்சாப்பை போட்டுத்தாக்கிய லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (2 சதத்துடன் 374 ரன்), விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் (271 ரன்), தீபக் ஹூடா (227 ரன்), பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ்கான் உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள். 

ஏற்கனவே டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த லக்னோ அணி அதிக நம்பிக்கையுடன் களம் காணும். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

உத்தேச அணி 

டெல்லி கேப்பிடல்ஸ் - பிருத்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கே), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கே), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், மொசீன் கான்.

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த், கேஎல் ராகுல், குயின்டன் டி காக்
  •      பேட்டர்ஸ் - டேவிட் வார்னர், ரோவ்மேன் பவல்/ மார்கஸ் ஸ்டோனிஸ், பிரித்வி ஷா
  •      ஆல்-ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர்
  •      பந்துவீச்சாளர்கள் - குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement