ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கரோனா தலைதூக்கியுள்ள டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
ஐபிஎல் 2022 போட்டியில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான மோதலுக்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சிலருக்கு உறுதியான கரோனா தொற்றுகள் சிறிது குழப்பத்தை உருவாக்கியுள்ளன.
மிட்செல் மார்ஷ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் உதவி ஊழியர்களின் நான்கு உறுப்பினர்களுக்கு கரோனா உறுதியாகி உள்ளது. இன்று காலையில் மற்றொரு சுற்று சோதனைக்குப் பிறகு கூடுதல் முடிவுகள் எடுக்கப்படும். இருப்பினும் புனேயில் நடைபெறவிருந்த மோதல் தற்போது மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
- இடம் - ப்ரபோர்ன் மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி இதுவரை ஐந்து ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளுடன் சிறந்த தொடக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. கடைசி ஆட்டத்தில் ஆர்சிபிக்கு எதிராக 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய போதிலும், மிடில் ஆர்டர் தொடர்ந்து சொதப்புவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
முக்கியமான எண்.3 ஸ்லாட்டில் ஐந்து போட்டிகளில் நான்கு பேட்ஸ்மேன்களை பயன்படுத்தியது டெல்லி அணி. யாரும் குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பஞ்சாப் பேட்ஸ்மேன்களின் ஆக்ரோஷத்தை எதிர்கொள்வது டெல்லி பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியாக இருக்கும். மார்ஷ் இல்லாததால், பேட்டிங்கை பலப்படுத்த டெல்லி அணி நார்ட்ஜே அல்லது டிம் சிஃபெர்ட்டை மீண்டும் அழைத்து வரலாம். தவான் அச்சுறுத்தலை குறைக்க குல்தீப் பவர்பிளேயில் பந்துவீச வாய்ப்பு உள்ளது.
மறுபக்கம் பஞ்சாப் பவர்பிளேயில் மிகவும் ஆக்ரோஷமான அணியாகும். பவர்பிளேவில் ஒரு ஓவருக்கு சராசரியாக 9.81 ரன்கள் எடுத்துள்ளது . ஆனால் டெத் ஓவர்களில் பஞ்சாப் பின்னடைவையே சந்தித்து வருகிறது. அதன் டெத் ஓவர் சராசரி 9.22. மற்ற அணிகளுடன் ஒப்பிட்டால் இது மிகக் குறைவு. ஒரு நல்ல பவர்பிளேக்குப் பிறகு, அவர்கள் மிடில் ஓவர்களில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்துள்ளனர். இங்குதான் பஞ்சாப் அணி தன் வசமுள்ள ஆட்டத்தை இழக்கிறது.
லியாம் லிவிங்ஸ்டனைத் தவிர, மற்ற மிடில் பேட்ஸ்மேன்கள் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஷாருக் கான் மற்றும் ஒடியன் ஸ்மித் டெத் ஓவர்களில் அடித்து விளையாட முயற்சித்தபோதிலும், அது எடுபடாமல் போகிறது. தோல்வியில் இருந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப இரு அணிகளும் தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 28
- டெல்லி வெற்றி - 13
- பஞ்சாப் வெற்றி - 15
உத்தேச அணி
டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிருத்வி ஷா, டேவிட் வார்னர்,அன்ரிச் நார்ட்ஜே, ரிஷப் பண்ட் (கே), ரோவ்மன் பவல்/டிம் செய்ஃபெர்ட், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், கலீல் அகமது.
பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் (கே), பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ்/ பனுகா ராஜபக்ஷா, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா , ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த்
- பேட்டர்ஸ் - டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், ஷிகர் தவான்
- ஆல்-ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டோன்
- பந்துவீச்சாளர்கள் - கலீல் அகமது, குல்தீப் யாதவ், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.
Win Big, Make Your Cricket Tales Now