ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை மாலை தொடங்கும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் நாளை இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் மாலை தொடங்கும் முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
- இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
- நேரம் - 3.30 மணி
போட்டி முன்னோட்டம்
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்திய உற்சாகத்துடன் நாளைய போட்டியில் களமிறங்குகிறது.
அணியின் பேட்டிங் வரிசையில் எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், லமோர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், சஞ்சு சாம்சன், ரியான் பராக், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பந்துவீச்சில் கார்திக் தியாகி, முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோருடன் சேத்தன் சகாரியா, கிறிஸ் மோரிஸும் உள்ளது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது.
ரிஷப் பந்த் தலைமையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அதிலும் அணியின் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்திருப்பது அணிக்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.
பந்துவீச்சில் நோர்ட்ஜே, ரபாடா, அஸ்வின், அக்ஸர் படேல் ஆகியோரும் உள்ளது எதிரணிக்கு நிச்சயம் நெருக்கடியை உருவாக்கும் என்று கருதப்படுகிறது. இருப்பினும் அதிரடி ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் காயமடைந்திருப்பது அணிக்கு சற்று பின்னடைவை உருவாக்கியுள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 23
- டெல்லி கேப்பிட்டல்ஸ் - 11
- ராஜஸ்தான் ராயல்ஸ் - 12
உத்தேச அணி
டெல்லி கேப்பிட்டல்ஸ்- பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கே), மார்கஸ் ஸ்டோய்னிஸ்/ டாம் கரன், சிம்ரான் ஹெட்மையர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, அவேஷ் கான்.
ராஜஸ்தான் ராயல்ஸ் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், எவின் லூயிஸ், சஞ்சு சாம்சன் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், மஹிபால் லமோர், ரியான் பராக்/ மனன் வோரா, ராகுல் திவேத்தியா, கிறிஸ் மோரிஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சக்காரியா, கார்திக் தியாகி.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
- பேட்டர்ஸ்- எவின் லூயிஸ், மஹிபால் லமோர், பிரித்வி ஷா, ஷிகர் தவான்
- ஆல் -ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டன், கிறிஸ் மோரிஸ், அக்சர் படேல்
- பந்துவீச்சாளர்கள் - முஸ்தாபிசூர் ரஹ்மான், அன்ரிச் நார்ட்ஜே, கார்திக் தியாகி
Win Big, Make Your Cricket Tales Now