ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்றைய ஐபிஎல் போட்டியில் கடைசி ஆட்டத்தில் தாங்கள் பெற்ற வெற்றியை தொடரும் முனைப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2022 சீசனில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் வலுவாக உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 3இல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
- இடம் - வான்கடே மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசியாக விளையாடிய போட்டியில் பஞ்சாப் நிர்ணயித்த 116 ரன்கள் இலக்கை 10.3 ஓவர்களில் எட்டி அபார வெற்றி பெற்றது. அணியில் சிலருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையிலும் சிறப்பாக விளையாடி அசத்தியது டெல்லி.
பிருத்வி ஷா, டேவிட் வார்னர் ஆகிய இருவரும் வலுவான துவக்கத்தை அணிக்கு அமைத்துக் கொடுக்கும் போதிலும் அணியின் மிடில் ஆர்டர் சீரற்ற முறையில் ஆடுவது சற்றே பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சர்பராஸ் கான், ரிஷப் பந்த், லலித் யாதவ் ஆகியோரிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை அணி எதிர்ப்பார்க்கிறது. அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், கலீல் அகமது ஆகியோர் சிறப்பாக விளையாடி பலம் சேர்க்கிறார்கள்.
மறுபக்கம் ராஜஸ்தான் அணியில் பட்லரின் அசுர ஃபார்ம் மிகப்பெரும் பலமாக பார்க்கப் படுகிறது. அவருடன் படிக்கல், சஞ்சு சாம்சன் இணைந்து சிறப்பாக விளையாடினால் எளிதாக அந்த அணி 200 ரன்களை எளிதாக எட்டிவிடும். ஹெட்மையர் சிறப்பாக விளையாடி வருவதும் அணிக்கு கூடுதல் பலம்.
சுழற்பந்துவீச்சில் மாயாஜாலம் செய்யும் சஹால், அஸ்வின் எதிரணிக்கு குறிப்பாக டெல்லியின் மிடில் ஆர்டருக்கு தலைவலியாக இருப்பர். ட்ரெண்ட் போல்ட் தன் பங்குக்கு சிறப்பாக விளையாடுவதால் இந்த ஆட்டம் டெல்லி அணிக்கு ஒரு அக்னிப் பரீட்சை தான்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 24
- டெல்லி வெற்றி - 12
- ராஜஸ்தான் வெற்றி - 12
உத்தேச ஆடும் லெவன்
டெல்லி கேப்பிடல்ஸ் : பிருத்வி ஷா, டேவிட் வார்னர், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்) , லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முஸ்தபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், கலீல் அகமது
ராஜஸ்தான் ராயல்ஸ் : ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், கருண் நாயர், ஆர் அஷ்வின், ஓபேட் மெக்காய், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், ரிஷப் பந்த்
- பேட்டர்ஸ் - டேவிட் வார்னர், ஷிம்ரோன் ஹெட்மையர், பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கல்
- ஆல்-ரவுண்டர்கள் - அக்ஸர் படேல்
- பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட், குல்தீப் யாதவ், கலீல் அகமது.
Win Big, Make Your Cricket Tales Now