Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 21, 2021 • 22:13 PM
Delhi Capitals vs Sunrisers Hyderabad, 33rd IPL Match – Blitzpools Cricket Match Prediction, Fantasy
Delhi Capitals vs Sunrisers Hyderabad, 33rd IPL Match – Blitzpools Cricket Match Prediction, Fantasy (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

இதில் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கடைசி இடத்திலும் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • நேரம் - 7.30 மணி
  • இடம் - துபாய் சர்வதேச மைதானம்

போட்டி முன்னோட்டம்

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் கடந்த முறை இறுதிப்போட்டிவரை முன்னேறி கோப்பையை இழந்துள்ளதால், இந்த சீசனில் நிச்சயம் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. 

அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தவரையில் பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சிம்ரான் ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் என அதிரடி வீரர்களைக் கொண்டுள்ளது. பந்துவீச்சில் காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, அஸ்வின், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா ஆகியோரை கொண்டுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளது. 

அதேசமயம் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நடப்பு சீசன் மிக மோசமானதாக அமைந்துள்ளது. ஏனெனில் அந்த அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. 

இதனால் இனி வரும் போட்டிகளில் அந்த அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெறும் என்பதால், நிச்சம் அந்த அணி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். 

அணியின் பேட்டிங் வரிசையில் டேவிட் வார்னர், ஜேசன் ராய், விஜய் சங்கர், மனீஷ் பாண்டே, அப்துல் சமத் ஆகியோரும், பந்துவீச்சில் ரஷித் கான், நடராஜன், புவனேஷ்வர் குமார் ஆகியோரும் இருப்பது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 19
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 8
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 11

உத்தேச அணி
டெல்லி தலைநகரங்கள் -
ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கே), சிம்ரான் ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், லலித் யாதவ், ஆர் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, அமித் மிஸ்ரா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டேவிட் வார்னர், ஜேசன் ராய், கேன் வில்லியம்சன், மணீஷ் பாண்டே, விஜய் சங்கர்/ கேதர் ஜாதவ், ஸ்ரீவத் கோஸ்வாமி, அப்துல் சமத், ரஷித் கான், புவனேஸ்வர் குமார், டி நடராஜன்/ கலீல் அகமது, சித்தார்த் கவுல்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ் - பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், டேவிட் வார்னர், அப்துல் சமத், கேன் வில்லியம்சன்
  • ஆல் -ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோய்னிஸ்
  • பந்து வீச்சாளர்கள் - ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, ரஷித் கான், புவனேஸ்வர் குமார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement