
பிசிசிஐ நடத்தும் பிரதான டி20 தொடரில் ஒன்று சையத் முஷ்டாக் அலி தொடராகும். இதில் முதல் முறையாக இம்பேக்ட் பிளேயர் விதி முதல் முறையாக அமலுக்கு வந்தது. அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இந்த விதியை கொண்ட வர முயற்சி செய்கிறது, அதற்கு இந்த விதியை முன்னோட்டமாக சையது முஸ்தாக் அலி தொடரில் பிசிசிஐ அமல்படுத்தியது.
இந்த விதியை முதல் நாளே ஏராளமான அணிகள் பயன்படுத்தியது. முதலில் அந்த விதியை பற்றி தற்போது காணலாம். அதாவது போட்டி தொடங்குவதற்கு முன் 4 மாற்று வீரர்களை ஒவ்வொரு அணியும் அறிவிக்க வேண்டும். இதில் எதாவது ஒரு வீரரை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தலாம். ஏற்கனவே பிளேயிங் லெவனில் இருக்கும் ஒரு வீரரை ஒரு இன்னிங்சில் 14ஆவது ஓவர் முடிவதற்குள் இந்த இம்பேக்ட் பிளேயரை வைத்து மாற்றலாம்.
அந்த இம்பேக்ட் வீரரை பேட்ஸ்மேனுக்கு பவுலராகவோ, இல்லை பவுலருக்கு பேட்ஸ்மேனாகவோ கூட மாற்றலாம். இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. அதே போன்று ஏறகனவே ஆட்டமிழந்த பேட்ஸ்மேனுக்கு பதலாக புது பேட்ஸ்மேனை (14வது ஓவர் முடிவதற்குள்) கொண்டு வரலாம். இதே போன்று ஒரு வீரர் சில ஓவர் வீசிய பிறகு, அவர் பந்துவீச்சு எடுப்படவில்லை என தெரிந்தால் 14ஆவது ஓவருக்கு முன் அவரை மாற்றி வேறு ஒரு வீரரை இம்பேக்ட் பிளேயிராக மாற்றலாம்.