NZ vs BAN: கான்வே அரைசதத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
நியூசிலாந்து - பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் போட்டியில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் நஜ்முல் ஹொசைன் ஒருமுனையில் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் மெஹிதி ஹசன், லிட்டன் தாஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Trending
பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நஜ்முல் ஹொசைன் 33 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அஃபிஃப் ஹொசைன் 24 ரன்களோடு பெவிலியனுக் திரும்பி ஏமாற்றமளித்தார்.
அதனைத் தொடந்து வந்த வீரகளும் சொற்ப ரன்களோடு பெவிலியனுக்கு திரும்ப, இறுதியில் கேப்டன் நூருல் ஹசன் அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி என இறுதிவரை ஆட்டமிழக்காமல் 25 ரன்களைச் சேர்த்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ட்ரெண்ட் போல்ட், டிம் சௌதி, பிரேஸ்வெல், இஷ் சோதி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - டேவான் கான்வே இணை தொடக்கம் தந்தனர். இதில் ஃபின் ஆலன் 16 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே அரைசதம் கடந்து அசத்தினார்.
அவருக்கு துணையாக விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன்னும் தனது பங்கிற்கு 30 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை களத்தில் இருந்த டெவான் கான்வே 70 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now